Tuesday, December 28, 2010

ஆய்வாளர்களுக்குத் தமிழ் இணைய தளங்கள் அறிமுகம்

தமிழ் இணைய தளங்கள் அறிமுகம்



மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி தமிழாய்வுத் துறை சார்ந்த ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இன்று(28.12.2010) தமிழில் உள்ள இணைய தளங்கள் நேரடி செயல்விளக்கப் பயிற்சி மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் இந்தப் பயிற்சியை நடத்தினார். ஆய்வியல் நிறைஞர் மாணவர்கள் இந்தச் செயல்விளக்க நேரடிப் பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Tuesday, December 21, 2010

பாப்பா உமாநாத் காலமானார் - மக்கள் அஞ்சலி - பெண்கள் கதறல்

மறைந்தப் பெண்ணியப் போராளி, களச் செயல்பாட்டாளர், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், இடது கம்யூனிஸ்ட் மைய, மாநிலக் குழுக்களின் உறுப்பினர் பாப்பா உமாநாத் அவர்கள். அவர்களின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மாவட்ட அலுவலக கட்டிடத்தில் வைக்கப்பட்டது. தமிழ்த்திணையின் சார்பில் மறைந்தப் போராளிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பொதுமக்களும், பல்வேறு அரசியல் இயக்கம் சார்ந்தவர்களும் பெண்ணியப் போராளிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி செலுத்த வந்தவர்களில் பெண்கள் கதறி அழுத காட்சிகள் நெஞ்சை நெகிழ வைத்தது. தமிழ்த்திணையின் சார்பில் இந்தக் காணொளி கட்சி அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படுகின்றது.

Sunday, December 19, 2010

பாப்பா உமாநாத் இன்று (17/12/2010)திருச்சியில் காலமானார்- வீரவணக்கம்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாப்பா உமாநாத் இன்று திருச்சியில் காலமானார்.தமிழ்த்திணையின் சார்பில் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் நேரில் சென்று வீரவணக்கம் செலுத்தினார்.
இவருக்கு வயது 82. திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே அண்ணாநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த பாப்பா உமாநாத், வயது முதிர்வு காரணமாக காலமானார்.
இவர் திருச்சி அருகே உள்ள திருவரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். தற்போது வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாதர் சங்கத்தில் மாநில பொறுப்பு வகித்து வந்தவர்.
இவரது கணவர் உமாநாத் முன்னாள் எம்பி ஆவார். இவர்களுக்கு கண்ணம்மாள், வாசுகி, நிர்மலா ராணி ஆகிய மூன்று மகள்கள் இருந்தனர். கண்ணம்மாள் கடந்த வருடம் காலமானார்.

மறைந்த பாப்பா உமாநாத் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும், இதர கட்சியினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாப்பா உமாநாத் மறைவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான தோழர். பாப்பா உமாநாத் டிசமபர் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருச்சியில் காலமானார்.
பொன்மலையில் செயல்பட்டு வந்த தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தொழிற்சங்கப் பணிகளில் சிறு வயது முதலே அவர் துடிப்புடன் ஈடுபட்டு வந்தார். 1946ம் வருடம் தொழிலாளர் போராட்டத்தை தொடர்ந்து அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது, சங்கத்திடல் மைதானத்தில் குண்டடிப்பட்டு தொழிலாளர்களுடன் அவர் இருந்தார்.
1948ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட கட்சியில் தனது இளம் வயதிலேயே பாப்பா உமாநாத் தீவிரமாக செயல்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்த போது அவருடைய தாயார் லட்சுமி அம்மாள் இறந்த செய்தி வந்தது. கட்சியிலிருந்து விலகுவதாக எழுதிக் கொடுத்தால் தான் உங்கள் அம்மாவை பார்க்கலாம் என்று அரசு சொன்னபோது, உறுதியாக மறுத்த வீராங்கனை தோழர் பாப்பா உமாநாத்.
1962ம் ஆண்டு இந்திய - சீன எல்லை மோதலை தொடர்ந்து பாதுகாப்பு கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1973ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாப்பா உமாநாத், கே.பி. ஜானகியம்மாள் முயற்சியால் ஜனநாயக மாதர் சங்கம் துவங்கப்பட்டது. அதன் அமைப்பாளராக பாப்பா உமாநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாப்பா உமாநாத் தலைமையில் இயங்கிய ஜனநாயக மாதர் சங்கம், பெண்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து:ம ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளது. பெண்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக போராடும் போர்க்குணமிக்க அமைப்பாக வளர்த்தெடுத்ததில் பாப்பா உமாநாத்துக்கு பெரும் பங்குண்டு.
1989 ஆம் ஆண்டில் திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், சட்டமன்றத்தில் சிறப்பாக பணியாற்றினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மத்தியக்குழு உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றி மக்களின் அன்புக்கும், பாசத்திற்கும் உரியவராக அவர் விளங்கினார். அவரது மறைவு கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

பத்திரிக்கை செய்திகளுடன் திருச்சியிலிருந்து நிலவன்

அமெரிக்காவைக் கலக்கிய தமிழர் கே.ஆர். ஸ்ரீதர்




கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.

மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட
தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும்.

ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித்தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம். உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. 100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Tuesday, December 14, 2010

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் - ஏவிசி கல்லூரி -14.12.2010

ஒருமைவகைப் பல்கலைக்கழக முயற்சியை முழுமையாகக் கைவிடக்கோரி இந்திய மாணவர் சங்கம்
ஏவிசி கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம்

அரசு உதவிபெறும் கல்லூரிகளான மதுரை தியாகராசர கல்லூரி, கோவை பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி நிறுவனங்களைத் தனியார் சுயநிதி ஒருமைவகைப் பல்கலைக்கழகமாக மாற்றும் தமிழக அரசின் முயற்சியை முழுமையாகக் கைவிடக் கோரி மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி வாயில் முன்பு காலை 9 மணியளவில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க நாகை மாவட்டத் தலைவர் பி.மாரியப்பன் தலைமை தாங்கினார். ஒருமைவகைப் பல்கலைக்கழகம் அமைந்தால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், தனியார்மயம், தராளமயம் இவற்றிற்கு ஊக்கம் அளிக்கும் செயலாக இருக்கும் என்பதை வலியுறுத்தி நாகை மாவட்ட இந்திய மாணவர் சங்கச் செயலாளர் வா.சிங்கரவேல் அவர்கள் எடுத்துரைத்து எழுச்சியுரையாற்றினார். மாணவர், ஆசிரியர் இந்தப் பிரச்சனையில் போராடத் தேவையில்லை என்ற தமிழக முதல்வர் அவர்களின்அறிக்கை வெளிவர இந்தி மாணவர் சங்கம் தொடக்க நிலையிலிருந்து உறுதியாக இருந்தது என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத தஞ்சை மண்டலத் தலைவர் பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் பாராட்டினார். இந்திய மாணவர் சங்கம் மாணவர்களின் அடிப்படையான உரிமையான கல்வி உரிமைக்காகப் போராடி வருகின்றது. அதன் செயல்பாடுகளுக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ஏவிசி கிளைப் பொருளாளர் பேராசிரியர் முனைவர் எம்.மதிவாணன் எடுத்துக்கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத் துணைத் தலைவர் எஸ்.சரண்ராஜ், ஏவிசி கல்லூரி இந்திய மாணவர் சங்கக் கிளை நிர்வாகிகள் ஜெபராஜ், செல்லத்துரை, ஸ்டாலின், பிரவீண் மற்றும் 100க்கான மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இந்திய மாணவர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.தமிழரசன் நன்றி கூறினார்.

ஒருமைவகைப் பல்கலைக்கழகம் எதிர்ப்பு - AUT, MUTA,TANTASC - சென்னை (12.12.2010)



சென்னை புதுப்பேட்டை பின்னி இணைப்புச்சாலையில் 12.12.2010 ஞாயிறு அரசு உதவிபெறும் கல்லூரிகளை ஒருமைவகைப் பல்கலைக்கழகமாக மாற்றும் தமிழக அரசின் முயற்சியைக் கண்டித்து பெருந்திரள் உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக,மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம் பங்கேற்றன. இதில் சுமார் 1200பேர் கலந்துக்கொண்டனர்.
இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னணித் தலைவர் தளவாய் சுந்தரம் உரையாற்றினார். சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன், இந்திய மாணவர் சங்கம் மாநில பொறுப்பாளர் இராஜ்மோகன் எனப் பலரும் உரையாற்றினார்கள்.
ஆசிரியர், அலுவலவர், மாணவர் அமைப்பு நடத்திய இந்த உண்ணாவிரதம் சிறப்பாக நடந்தேறியது.

சென்னையிலிருந்து நிலவன்

Saturday, October 23, 2010

பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் மறைவுக்கு வீர வணக்கம்!

அந்தோ, நம் அறிவாயுதம் ஒன்று பறிக்கப்பட்டதே!
பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் மறைவுக்கு தமிழ்த்திணையின் வீர வணக்கம்!



கழகத்தின் அறிவு ஆயுதங்களில் ஒன்று இன்று (22.10.2010) மாலை இயற்கையின் கோணல் புத்தி காரணமாக நம்மிடமிருந்து பறிக்கப்பட்டது கொடுமை! கொடுமையிலும் கொடுமை!

கோவை தந்த கொங்கு அறிஞர், பெரியார் பெருந்தொண்டர், பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான் அவர்களின் திடீர் மறைவு நம்மை திடுக்கிட வைத்ததோடு, சொல்லொணாத் துயரத்தில் தள்ளியுள்ளது!

சென்ற இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு பெரியார் திடலில் உடல்நலக் குறைவு (விடியற்காலையில்) ஏற்பட்டவுடன் நமது தோழர் கள் கலி. பூங்குன்றன், சீதாராமன் முதலியோர் ஒரு பிரபல மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் சென்று சிகிச்சை பெற வைத்து ஓரளவு நலம் பெற்றுத் திரும்பினார். அவர் கோவைக்கே சென்று நிரந்தரமாகத் தங்க முடிவு செய்து - என்னிடம் அனுமதி கேட்பதுபோல் சொன்னார். நான் உங்கள் உடல்நலம்தான் முக்கியம்; அவசியம் அதுபோலவே செய்யுங்கள்; அங்கிருந்தே எழுத்துப் பணி செய் யுங்கள் என்று கூறி கோவைக்கு அனுப்பினோம்.

அங்கிருந்து சில நாள்களுக்கு முன்தான் சென்னைக்குத் திரும்பினார் - அவரை, அவரின் துணைவியாரும், மகளும் பெரியார் திடலில் சந்தித்துவிட்டு, விடைபெற்று நேற்று (22.10.2010) இரவுதான் கோவைக்கு திரும்பினர்.

இன்று பகல் என் வாழ்விணையர் மற்றும் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாராம். நான் உள்ளே பணியில் இருந்தேன். ஜனவரி பொங்கல்வரை - உலக நாத்திகர் மாநாடு வரை நான் பணியாற்றிவிட்டு, பிறகு கோவைக்குச் சென்று தங்குவேன் என்று கடமை உணர்வோடு சொல்லி, பெரியார் திடலில் தங்கியவருக்கு இன்று (22.10.2010) மாலை 6.30 மணிக்கு திடீர் என்று உடல்நலக் குறைவு; மருத்துவமனைக்கு செல்லு முன்பே மாரடைப்பு அவருக்கு ஏற்பட்டு உயிர் பிரிந்தது என்ற வேதனையான செய்தி திடலில் கூட்டத்தில் பேசி முடித்தவுடன் கிடைத்தது; அதிர்ந்து போனோம். கழகக் குடும்பத்தினர் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலை அழுத கண்ணீரோடு தெரிவிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

அயராத எழுத்துப் பணி, சிறப்பான பேச்சாற்றல், ஆழமான சிந் தனை வளம், அடக்கம் மிகுந்த பண்பின் குடியி ருப்பு, ஏராளம் படித்தும் தன் முனைப்பற்ற பல் திறன் அடங்கிய கொள்கலன் அவர்.

அவரது மறைவு அவரது குடும்பத் தினருக்கு - துணைவியார் பிள்ளைகள், உறவினர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்றாலும் கழகத்திற்கு - குறிப்பாக நமக்கு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

தொண்டின் தூய உருவமான அவருக்கு நமது வீர வணக்கம்!

அவரது துணைவியார், பிள்ளைகள் அனை வருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

மானமிகு துரை. சக்ரவர்த்தி, பேராசிரியர் இராமநாதன், பேராசிரியர் இறையன் போன்றவர் களை இழந்த நிலையில், மேலும் இப்படி ஓர் இழப்பா! தாங்க இயலாத உள்ளத்தோடு உள்ளேன். பகுத்தறிவுவாதிகள் தாங்கித்தானே ஆக வேண்டும்? வேறு வழி இல்லையே!


தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
22.10.2010

நன்றி - விடுதலை

Monday, October 11, 2010

மறைந்தார் திருச்சி எம்.எஸ்.வெங்கடாசலம்(10.10.10)



திருச்சிராப்பள்ளி எம்.எஸ்.வெங்கடாசலம்(75) இன்று(10.10.10) காலை 5.30 மணியளவில் திருச்சியில் இயற்கை எய்தினார். திரு.எம்.எஸ்.வெங்கடாசலம் அவரகள் பேரறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய Homeland, திராவிடநாடு இதழ்களின் துணைஆசிரியராகப் பணியாற்றியப் பெருமைக்குரியவர். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுபம் பண்புடையவர். சிறந்த மொழிப்பெயர்ப்பாளர். கம்பராமாயணத்தின் 2000 பாடல்களை மொழிபெயர்த்துள்ளார். இந்த மொழிப்பெயர்ப்பு ஆகச்சிறந்தது எனப் பிரேமாநந்தக்குமார் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். பாரதிதாசன் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அண்ணா இருக்கையில் ஆலோசகராகவும் தற்சமயம் பணியாற்றியவர். திருச்சி மாவட்ட திமுக செயலராக இருந்துள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு உடல்நலம் குன்றிய நிலையிலும் இவர் எழுதிய நான் கண்ட அண்ணா என்னும் நூல் வெளிவருவதற்கு முன்பே தமிழ்த்திணையில் மின்நூலாக வெளிவந்தது என்பது மின்நூல் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்ததாகும்.தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர் என்பதும் இவரின் தனிச்சிறப்பாகும்.பேரறிஞர் அண்ணாவின் மகன் பரிமளம் அவர்களுடன் இணைந்து எம்.எஸ்.வி.அண்ணா பேரவை என்னும் இலக்கிய அமைப்பைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பொறுப்பாளர்களை நியமித்து பல ஆண்டுகாலம் நடத்திவந்தார்.
தமிழ்த்திணை சார்பில் அதன் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்கள் இயற்கை எய்திய அய்யா எம்.எஸ்.வி. அவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். தமிழக அமைச்சர்கள் மாண்புமிக கே.என்.நேரு, என்.செல்வராசு, மறுமலர்ச்சி திமுக முன்னணித் தலைவர் திருச்சி மலர்மன்னன் மற்றும் திராவிட இயக்கம் மற்றும் தமிழ் அமைப்பு சார்ந்த பலர் எம்.எஸ்.வி.யின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். அன்று மாலை 5.30 மணியளவில் திருச்சி புத்தூரிலிருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது. காவேரி தென்கரையில் உள்ள ஓயாமாரி இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழ்த்திணையின் பால் மாறா அன்புகொண்ட எம்.எஸ்.வி.யின் புகழ் ஓங்கு என்று உரக்க முழக்கமிடுவோம்.

-தமிழ்த்திணைக்காக திருச்சியிலிருந்து நிலவன்

Tuesday, October 05, 2010

தீண்டாமைக் காவல்துறையை இழுத்துப்பூட்டும் போராட்டம் - 02.10.10 - திருச்சிராப்பள்ளி - பெரியார் திராவிடர் கழகம்.



தமிழ்நாட்டில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தாத காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புபிரிவின் திருச்சி அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது. குழந்தைகள் பெண்கள் உட்பட 3000 இளைஞர்கள் கைதாயினர். திருச்சி வேர் அவுஸ் கிறிஸ்தவக் கல்லறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திருச்சி பழையகோவில் பங்குக்கு உட்பட்ட பகுதிகளான உப்புப்பாறை, செங்குளம் காலனி, சத்தியமுர்த்தி நகர் பகுதிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாயினர். சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, ஆதித்தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளின் தோழர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைதாகி உள்ளனர். திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள மீனாட்சி திருமண மண்டபம், சௌடீஸ்வரி மண்டபம், பீமநகர் பாலாஜி மண்டபம், கே.கே. நகர் காவல்துறை சமுதாயக்கூடம் ஆகிய மண்டபங்களில் கைதான தோழர்கள் அடைத்துவைக்கப்பட்டனர். மண்டபங்களில் இடம் இல்லாததால் திருச்சி நகரைத் தாண்டி தோழர்களை அழைத்துச்சென்று நடுரோட்டில் இறக்கிவிட்டது போலீஸ். கைது கிடையாது, வீட்டுக்குச் செல்லுங்கள் என திருப்பி அனுப்பினர். தோழர்கள் தங்களை அவசியம் கைது செய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுடன் போராடியபிறகு புதிது புதிதாக மண்டபங்களை தேர்வுசெய்து அவற்றில் தோழர்களை அடைத்தனர். பீம நகர் பகுதியிலும் கருமண்டபம் பகுதியிலும் தோழர்கள் தங்களை அவசியம் கைது செய்யவேண்டுமென வலியுறுத்தி நடுரோட்டில் மறியல் செய்யத் தொடங்கிய பிறகே அனைவரையும் காவல்துறை கைது செய்தது. கைது எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட உளவுத்துறை அதிகாரிகள் பெரும் முயற்சி செய்தும் தோல்வியடைந்தனர்.

தகவல் மற்றும் ஒளிப்படங்கள் - தாமரை மற்றும் அரசெழிலன்(மின்னஞ்சல் வழி)

Thursday, August 19, 2010

மயிலாடுதுறை செந்தமிழ்ப் பேரவை வண்ணங்களால் ஆனது நூல் திறனாய்வுக் கூட்டம் 14.08.2010



தில்லையாடி இராஜா என்னும் ஆர்.இராசேந்திரன் எழுதிய வண்ணங்களால் ஆனது சிறுகதை நூல் திறனாய்வுக் கூட்டம்
வரவேற்புரை - நல்லாசிரியர் ந.செ.இளமுருகுச்செல்வன்
தலைமை - முனைவர் தி.நெடுஞ்செழியன் தமிழ் இணைப்பேராசிரியர்,ஏவிசி கல்லூரி(ஆசிரியர், தமிழ்த்திணை)
முன்னிலை - தமிழ்வேழம் நாக.இரகுபதி

திறனுரையாளர்கள்

கதை சொல்லும் உத்திகள் - திரு.வெ.இராமகிருட்டினன்
வடிவங்கள் - பேராசிரியர் அ.கார்முகிலன்
கதைமாந்தர்கள் - முனைவர் சி.செல்வம்
கதைக் கருக்கள் - ஆய்வாளர் சீ.இளையராசா
சமூகச் செய்திகள் - இரா.சுரேஷ்குமார்

ஏற்புரை - தில்லையாடி இராஜா

நன்றியுரை - மாரி.பன்னீர்செல்வம்

நிகழ்ச்சி ஏற்பாடு - முனைவர் சு.தமிழ்வேலு, தமிழ்ப் பேராசிரியர், ஏவிசி கல்லூரி, மயிலாடுதுறை.

Wednesday, July 28, 2010

செம்மொழி மாநாடு செய்தது என்ன ?

---- தமிழேந்தி


செம்மொழி மாநாடு என்ன கிழித்தது
திரும்பவும் கலைஞரின் குடும்பமே செழித்தது
(செம்மொழி)

வெட்டியாய் முந்நூற்று எண்பது கோடியைக்
கொட்டிக் கரைத்த குடும்பத் திருவிழா
பொட்டுப் பூச்சியாய் வாழும் தமிழனை
முட்டாள் ஆக்கி முடித்த பெருவிழா
(செம்மொழி)

மகனொரு பக்கம் மாநாட்டைத் திறந்தார்
மகளோ தானே எல்லாமாய்ப் பறந்தார்
மனைவியர் மருமக்கள் பேத்தியர் இருந்தார்
மற்றுள்ள சொந்தங்கள் முன்வரிசை நிறைந்தார்
(செம்மொழி)
பாட்டால் புகழப் பாவலர் ஒருபுறம்
பல்லக்குத் தூக்கும் பேச்சாளர் மறுபுறம்
கேட்டுக் கேட்டு மு.க. மனம்மிகக் குளிரும்
கேட்டநம் வயிறோ தீப்பற்றிக் கருகும்
(செம்மொழி)

விருந்திட்ட இடத்தைக் கூட்டம் பிய்த்தது
வெளிஆய்வு அரங்கை ஈக்கள் மொய்த்தது
இருந்த தமிழ்நிலை நெஞ்சினைத் தைத்தது
"எழும்"இந்த இனம் என்றஎண்ணம் பொய்த்தது
(செம்மொழி)

பள்ளியில் நம்தமிழ் கட்டாயமி ல்லை
அறமன்றப் படிகளைத் தமிழ்தொட்ட தில்லை
கல்வியில் உயர்நிலை தமிழ் எட்டவில்லை
கரைத்த பணத்துக்கு முழுப்பயன் இல்லை
(செம்மொழி)

பேருக்கு ஈழத் தமிழர்க்காய் அழுகை
பெருங்கேடன் தில்லிக்கே கைகட்டித் தொழுகை
யாருக்கும் பெருநன்மை கூட்டாத கூட்டம்
யாருடைய ஆட்சிதான் தமிழ்த்துயர் ஓட்டும்?
(செம்மொழி)

Tuesday, July 27, 2010

JAC 8 - அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏவிசி கல்லூரி வாயில் முன்பு முழக்கப் போராட்டம்(27.07.2010)





JAC 8 - அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏவிசி கல்லூரி வாயில் முன்பு முழக்கப் போராட்டம்

கல்லூரி ஆசிரியர் மற்றும் அலுவலர் கூட்டு நடடிவக்கைக் குழு எடுத்த முடிவின்படி, தமிழக அரசு மற்றும் உயர்கல்வித் துறையை வலியுறுத்தி மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி வாயில் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏவிசி கிளைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவராமன் தலைமை தாங்கினார். அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலர் சங்கத்தின் மடாநிலப் பொறுப்பாளர் இரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். 8அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தஞ்சை மண்டலத் தலைவர் முனைவர் தி.நெடுஞ்செழியன் தொடக்கவுரை ஆற்றினார். போராட்டத்தில் 8 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
1. 1.1.2006 முதல் பணப்பயனையும் நிலுவைத் தொகை வழங்கிடுக.
2.ஆசிரியர்களின் பணி ஓய்வு வயதை 65ஆக உயர்த்திடுக.
3. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்துப் படிகளையும் ஆசிரியர்,அலுவலர்களுக்கு வழங்கிடுக.
4.பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுக. வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக.
5.முன்கூட்டியே பெறும் ஓய்வூதிய பணத்தின் அளவை 40 விழுக்காடாக உயர்த்திடுக.
6.பணிமூப்பில் இளையோர் பணிமூப்புடையோரைவிட அதிக ஊதியம் பெறும் முரண்பாடுகளை களைந்திடுக.
7.முழுஓய்வூதியம் பெற்றிட 30 ஆண்டுகள் என்றிருப்பதை 20 ஆண்டுகள் எனக் குறைத்திடுக.
8.அரசு,அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியாகவுள்ள ஆசிரியர்,ஆசிரியர் அல்லாத அலுவலர் பணியிடங்களை உடனே நிரப்பிடுக.
இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் முனைவர் இராமசாமி, முனைவர் செல்வநாதன் அலுவலர் சங்கதின் பொறுப்பாளர்கள் கமலமுருகன், கமலநாதன் மற்றும் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இறுதியில் முனைவர் எம்.மதிவாணன் நன்றி கூறினார்.

மயிலாடுதுறையிலிருந்து நிலவன்

Tuesday, June 08, 2010

தமிழ்த்திணை 5-ஆம் ஆண்டு நிறைவு விழா - சேலம், ஏற்காடு

தமிழ்திணை - தமிழ்வேழம் விருது - தமிழ்த்திணை சிறப்பு விருதுகள் புதிய பார்வை ஆசிரியர் இந்தி எதிர்ப்பு களவீரர் ம.நடராசன் வழங்கும் காட்சி



தமிழ்வேழம் விருது பெற்றோர்

திருச்சி வேங்கூர் புலவர் க.முருகேசன்(அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர், மதிமுக)
மயிலாடுதுறை திரு.நாக.இரகுபதி(தலைவர்,திருவள்ளுவர் மன்றம்)

தமிழ்த்திணை சிறப்பு விருது

முனைவர் அந்தோனிகுருசு(முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், தூயவளனார் தன்னாட்சிக் கல்லூரி,திருச்சிராப்பள்ளி)
தேனி சுப்பிரமணியன்(ஆசிரியர், முத்துக்கமலம் இணையதளம்)
முனைவர் பிரியக்குமார்(பேராசிரியர்,டி.பி.எம்.எல்.கல்லூரி,பொறையாறு)
முனைவர் அரங்க. மல்லிகா(பேராசிரியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை)
முனைவர் இரா.கலைவாணி(பேராசிரியர்,அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோவை)
செல்வன் சிறிதரன்(தமிழ்த்திணை இணைய வடிவமைப்பாளர்)

Monday, May 31, 2010

ஏவிசி கல்லூரி - புதிய முதல்வர்(பொ) - பேராசிரியர் ஆர்.ஞானசேகரன்


மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியின் புதிய பொறுப்பு முதல்வராக வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஆர்.ஞானசேகரன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர்(பொ) ஆர்.ஞானசேகரன் அவர்களுக்கு ஏவிசி கல்வி நிறுவனங்களின் தலைவர் சொ.செந்தில்வேல் சால்வை, சந்தனமாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். கல்விசார அலுவலர்கள் சார்பிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர் ஆர்.ஞானசேகரன் பேசும்போது, நான் ஏற்றுக் கொண்டுள்ள இந்தப் பொறுப்பின் மூலம் கல்லூரி வளர்ச்சிக்காக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து தரப்பினரும் நல்லாதரவு வழங்கிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மயிலாடுதுறையிலிருந்து தமிழ்த்திணையின் சிறப்பு செய்தியாளர் நெ.நிலவன்

Wednesday, May 26, 2010

கல்வி வணிகர்களுக்குச் சாட்டையடி - நெல்லை ஜாஸ்மின் சாதனை




கல்வி வணிகர்களுக்கும், கல்விக்காக பணத்தைத் கொட்டியழும் பெற்றோர்களுக்கும் எச்சரிக்கை

நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடம் பிடித்த ஜாஸ்மின்

டி.வி. பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார்

பணம் இருந்தால்தான் படிக்க முடியும். தனியார் பள்ளியில் படித்தால்தான் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று ஒரு மாயை தமிழ்நாட்டில் உள்ளது.அந்த மாயத்தோற்றத்தை இன்று உடைத்தெறிந்து இருக்கிறார் நெல்லை மாணவி ஜாஸ்மின்.
படிப்பில் முதன்மை பெறுவதற்கு, ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தாலே போதும் என்று ஜாஸ்மின் எடுத்துக்காட்டி உள்ளார்.

இவை மட்டுமின்றி தமிழக கல்வி வரலாற்றில் இன்னொரு அசாத்திய சாதனையையும் ஜாஸ்மின் புரிந்துள்ளார். மாநகராட்சிப்பள்ளி என்றாலே,கல்வித்தரம் இருக்காது என்று இளக்காரமாக நினைக்கும் மனோபாவம் உள்ளது. அதற்கு ஜாஸ்மின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜாஸ்மினின் தந்தை சேக் தாவூத் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவரது தாய் நூர்ஜஹான்.மாணவி ஜாஸ்மினுக்கு இம்ரான் என்ற அண்ணனும், இர்பான் என்ற தம்பியும் உள்ளனர். இவர்களில் இம்ரான் கூலி வேலை செய்து வருகிறார். இர்பான் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.ஜாஸ்மினின் தந்தை ஷேக் தாவூத் மிகவும் கஷ்டப்பட்டே குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இருந்த போதிலும் தனது குழந்தைகள் படிப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். ஜாஸ்மின் சிறுவயதிலிருந்தே மிகவும் ஆர்வமாக படித்து வருகிறார்.

அவரது ஆர்வத்தை அறிந்து கொண்ட ஷேக் தாவூத் தனது மகளை அதிக செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் நெல்லை டவுணில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தனது குடும்ப நிலையை உணர்ந்த மாணவி ஜாஸ்மின் சிறந்த முறையில் படித்து அனைத்து வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.

மாணவி ஜாஸ்மின் முதல் வகுப்பிலிருந்து தற்போது வரை நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்து வந்தார். அந்த பள்ளியில் மொத்தம் 3,450 மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு படிக்கும் அனைத்து மாணவிகளும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பள்ளி தொடங்கியது முதல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மாநகராட்சி பள்ளி என்றாலும் நெல்லையில் உள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

மாநில அளவில் முதல் இடம் பிடித்தது குறித்து மாணவி ஜாஸ்மின் கூறியதாவது:-

மாநில அளவில் சாதனை படைக்க கடினமாக படித்தேன். 498 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர் பார்த்தேன். சமூக அறிவியலில் 2 மதிப்பெண்கள்குறைந்து விட்டதால் அதனை பெற முடியவில்லை.

பெரிய பள்ளியில் படித்தால்தான் சாதிக்க முடியும் என்றனர். ஆனால் எங்கள் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை கடவுளின் கிருபையால் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எனக்குஊக்கமளித்தார்கள். மற்ற பள்ளிகளை போல எங்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் போதே 10-ம் வகுப்பு பாடங்களை தொடங்குவது கிடையாது. தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பேன். அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்து விடுவேன். இரவு 1 மணி வரை படிப்பேன்.10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பார்க்க மாட்டேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆசைபடுகிறேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் முடித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி ஜாஸ்மின் குறித்து அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் கூறியதாவது:-

எங்கள் பள்ளி தொடர்ந்து பல சாதனைகள் படைத்து வருகிறது. இந்த முறை மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. இதற்கு எங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பே முக்கிய காரணம். மாணவி ஜாஸ்மின் மிகவும் அமைதியானவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் மிகவும் கவனமாக படிப்பார். இதனால் வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் எங்களது பள்ளி நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தது. எங்கள் பள்ளி தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு முன்பிருந்த தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியைகள் கடுமையான அடித்தளம் இட்டு சென்றதால் எங்கள் பள்ளி சாதித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி ஜாஸ்மினின் தந்தை ஷேக்தாவூத் கூறியதாவது:-

நான் கடந்த 17 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். எனது மகள் ஜாஸ்மின் எல்.கே.ஜி.யில் இருந்தே நன்கு படிப்பாள். முதலாம் வகுப்பில் இருந்து கல்லணை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறாள். மற்ற பள்ளிகளை விட இந்த பள்ளியில் சிறந்த முறையில் மாணவிகளுக்கு பயிற்சிஅளிக்கப்படுகிறது.நான் பெரிய அளவில் படிக்காததால் எனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வைத்து வருகிறேன். அதற்கு ஏற்றாற்போல் மகள் ஜாஸ்மின் சிறப்பாக படித்து வருகிறாள். அவள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதால் அவள் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம். தினமும் பள்ளி முடிந்து மாலையில் வீடு வந்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுவாள். அதிகமாக டி.வி. பார்க்க மாட்டாள். பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் டி.வி. பார்க்கும் பழக்கத்தை விட்டு விட்டாள். டியூஷனுக்கு எங்கும் செல்லவில்லை. அன்றைய பாடங்களை அன்றே படித்து வந்ததால் சாதனை படைத்துள்ளார். அவளது விருப்பப்படி படிக்க வைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்

நன்றி - மாலைமலர்

Monday, May 10, 2010

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் - உண்ணாவிரதம் - சென்னை(06.05.2010)


பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில், நிதியுதவி பெறும் கல்லூரிகளில் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிதி மற்றும் நிர்வாகச் சீர்கோடுகளைக் கண்டித்தும், ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் மீது நடைபெற்றுவரும் பணிநீக்கம், பணிஇடைநீக்கம் போன்ற நடவடிக்கைகளை நிதியுதவி பெறும் கல்லூரிகள் கைவிடக் கோரியும் உண்ணாவிரதம் 06.05.2010ஆம் நாள் சென்னையில் உள்ள பின்னி இணைப்புச் சாலையில் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்திற்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பெ.ஜெயகாந்தி தலைமை வகித்தார். மூட்டா பொதுச்செயலர் விவேகானந்தன் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். பொதுச்செயலர் முனைவர் பன்னீர்செல்வம் உண்ணாவிரதத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார். பாமக சட்டமன்றக் கட்சித் தலைவர் கோ.கா.மணி கலந்துகொண்டு உரையாற்றினார். மாலையில் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி இலதா அவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துவைத்து நிறைவுரையாற்றினார்.

Monday, May 03, 2010

சமூக விஞ்ஞானி பாவேந்தர் - தமிழ்நாடன், குவைத்



சமூக விஞ்ஞானி பாவேந்தர்

இன்றைய உலகில் மானுட வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளமாக உள்ளன. அழிக்கப்படும் இயற்கைச் செல்வங்கள், சமநிலையற்ற சமுதாய போக்கு, தொடரும் பெண்ணியப் போராட்டங்கள், அருகிவரும் தனிமனித ஒழுக்கங்கள், பகுத்தறிவில் குறைபாடு என மக்கள் பிரச்சனைகள் பெருகிக்கிடக்கின்றன. சங்கத் தமிழில் மங்காச் செல்வங்களைப் பெற்றிருந்த தமிழ் இலக்கிய உலகத்தில் இன்றைக்கு புதுக்கவிஞர்களின் உலகமாக மாறிவிட்ட நிலையில், அவை வெளிப்படுத்தும் கருத்துக்கள் பெரும்பாலும் தனிமனித உயர்ச்சிக்கானதாகவே உள்ளது. பொதுநோக்கும் சமூகப்பார்வையும் அருகி உள்ளன. ஆனால் இவ்வகை புதுக்கவிதைகளின் ஆரம்ப கால பாவலர் பாவேந்தரின் பாடல்கள் அல்லது கவிதைகள் ஒரு குமுகாயத்தின் வெளிப்பாடாக அதன் உயர்ச்சியினை குறிக்கோளாகவும் உலக மேன்மையை கருவாகவும் கொண்டவை என்றால் மிகையில்லை, அந்த வகையில்
இன்றைக்கும் அவரது கருத்துக்களுக்கான தெவை இருப்பதும் அவரின் கொள்கைகள் உயிரோட்டமாக இருப்பதும் அவரை ஓர் அதிச்சிறந்த சமூக விஞ்ஞானி என்பதன் சான்றுகளாகும்.

ஒரு குமுகாயத்தின் அடையாளம், பண்பாடு, வரலாறு என்பன அவர்களின் மொழியும் அதன் தன்மையினையும் சார்ந்ததாகும். அந்த வகையில் ஒரு படைப்பாளனாக தனது மொழியின் வளர்ச்சிக்கும் அதன் பெருமைகள் சிறப்புக்களை தனது பாட்டில் வடித்த பெருமைகொண்டவர் பாவேந்தர்.

தமிழின் இனிமை என்ற பாட்டில், தனது நாவிற்கினிய சுவைகள் பல உண்டெனினும் தமிழே எனதுயிர் என்பார். தமிழின் சுவையில் தனது தாய் தந்தை உள்ளிட்ட சுற்றம் கூட அயலவராகுவதாக் கூறுகின்றார். அறுசுவை உணவுகள் உன்னை
வளர்த்தாலும் உயிரையும் உணர்வையும் வளர்ப்பது தமிழே என்று அதன் உச்சத் தகுதியினை உவப்பாய் எடுத்தியம்புகிறார். இன்றைய நவீனக்
கவிஞர்கள் தமிழை தமிழாகக் கூட உச்சரிக்கத் தயங்குவதோடு, அதன் தொன்மையினையும் சிறப்பியல்புகளையும் இலக்கிய
இலக்கண மரபுகளையும் கூட அறியாதவர்களாயிருப்பது கொடுந்துயரேயாகும்.

வேற்றுமையில் ஒன்றுமை கண்டதாகக் கூறுவர், ஆனால் இன்றோ தமிழர்கள் ஒன்றுமையின்றி வேறாயுள்ளனர்.

சாதி மதங்களில் வேற்றுமை கணட இனம் தமிழினமாகத்தான் இருக்கும். கட்சி மாயையிலும் பதவி பேரத்திலும் மயங்கி சகோதரர்களையே
விரோதிகளாக பாவிக்கும் குணம் தமிழர்களின் பொது குணமானதும், வாழுமிடங்களிலெல்லாம் வதைபடுவதும், சென்ற
இடமெல்லாம் செல்லாக்காசாகியதற்குமான காரணத்தை பாவேந்தர் கீழ்கண்டவரிகளால் அறியத்தருகிறார்.

‘இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால் -
துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினிலே
தூய்மை யுண்டாகிவிடும்; வீரம் வரும்!
(பாடல்: தமிழ்ப்பேறு).

ஆட்சியாளர்களிடம் மாற்றம் வரும், மக்கள் மனங்களில் மாற்றம் வரும் நாளே தமிழ் வழிக்கல்வியின் வெற்றி நாளாகும், தமிழ் அன்னையின் தவப்புதல்வர்களே சிந்திப்பீர்.

நமது தாய் மொழியாம் தமிழ் மொழி வளர, தமிழர் நாம் உயர்வோம் என்ற வகையில் பாவேந்தர் கூறும் தமிழ் மொழி வளர்ச்சிப் பணிகளாவன,

எளிய நடையில் நல்லத் தமிழ் நூல்களைப் படைத்திட வேண்டுகிறார், பின் நவீனத்துவவாதிகளின் முன் உரைக்கவேண்டும்.
உலக அறிவனைத்தையும் அருமைத் தமிழில் படைக்க கூறுகிறார், தமிழர் அனைவரும் ஏழை பாழைகளும் படித்திட வகை செய்ய வேண்டுமென்கிறார்,
கல்வித் தந்தைகளில் காதுகளை எட்டுமா, பாவேந்தரின் பரிவு.

தமிழ் நூல்களையே ஆங்கிலத்தில் படிக்கும் இன்றை தமிழரிடம், பிற மொழி நூல்கள் அனைத்தும் தமிழில் எட்ட விழைகிறார்.

“எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பல கழித்தோம்; குறைகளைந் தோமில்லை
தகத்த் காயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்.” என்ற வரிகள் வெற்றுப் பெருமை பேசும் வாய்ச்சொல் வீரர்களுக்கு விழும் சவுக்கடிகள்தாம்.

இவ்வாறாக தமிழ் மொழியினையும் தமிழர்களையும் போற்றிய பாவேந்தர் அவர்கள்,

தனது பாடல்களில் இயற்கையைப் பாடுகிறார், காதலை வெளிப்படுத்துகிறார், பெண்ணைப் போற்றுகின்றார் புதிய உலகம் காண புறப்பட்டார்,
நாட்டிற்குழைத்த பெரியோரை பெரியாரைப் பாடுகின்றார். இத்தகைய கருத்துக்கள் இவரின் பாடல்களிலே ஓங்கி நிற்பதும், படிபோர் மனதில்
வீரத்தினை விதைத்து அறிவினை பெருக்கி உணர்ச்சிகளை தூண்டுவதாக உள்ளதும் இன்றைய உலக போக்கிற்கு பெரும் பொருத்தப்பாட்டோடு
பயனளிப்பதும், அதன் நோக்கு போக்கினை அறிந்து அதற்கான மருந்தினையும் வழங்குவதைக் காணும்போது பாவேந்தர் அவர்கள் மாபெரும் சமூக விஞ்ஞானி என்பதும், காலத்தால் அழியா அவரின்
பாடல்கள் தமிழின் மாபெரும் செல்வங்கள் என்பதும் திண்ணம்.
வாழ்க பாவேந்தர் புகழ்! வளர்க அவர்தம் கொள்கைகள்! வெல்க தமிழினம்!

தமிழ்நாடன்
குவைத்
29.04.2010

Thursday, April 29, 2010

மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே இரயில் சேவை தொடங்கியது






கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் என நான்கு மாவட்டங்களில் வசிக்கும் ஒரு கோடி மக்களின் பல ஆண்டு கனவு இன்று நிறைவேறுகிறது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அமைக்கப் பட்டுள்ள அகல ரயில் பாதையில் இன்று (23.04.2010)முதல் ரயில்கள் ஓடும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவில் ரயில் சேவை 1853ம் ஆண்டு துவக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 1856ம் ஆண்டு, 'சென்னை ரயில்வே கம்பெனி' என்ற பெயரில் தென்னக ரயில்வே துவங்கியது. இந்த தென்னக ரயில்வேயில் இயக்கப்பட்ட 'போட் மெயில் சர்வீஸ்' என்ற சென்னை - ராமேஸ்வரம் (விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக) எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தகவல் தொடர்பிறகு பெரும் உதவியாக இருந்தது. குறிப்பிட்ட நேரத்திற்குள் கடிதங்கள் சென்றாக வேண்டும் என்பதால் தினமும் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கும், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கும் இடைநில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலில் பயணிகளும் சென்று வந்த நிலையில், 'போட் மெயிலுக்காக' தனி பெட்டிகள் இணைக்கப்பட்டன. இலங்கையில் இருந்து பயணிகள் தனுஷ்கோடி வரை கப்பல் மூலம் வந்து அங்கிருந்து, 'போட் மெயில்' ரயில் மூலம் சென்னைக்கும், சென்னையிலிருந்து ரயில் மூலம் தனுஷ்கோடி சென்று அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கைக்கும் சென் றனர். கப்பலில் செல்வதற்கான கட்டணமும் ரயில்வே நிர்வாகமே வசூலித்தது.
சென்னை - ராமேஸ்வரம் (விழுப் புரம் - கடலூர் - சிதம்பரம் - மயிலாடுதுறை வழி) ரயில் பாதை சென்னை முதல் விழுப்புரம் வரையிலும், மயிலாடுதுறையிலிருந்து ராமேஸ்வரம் வரையிலும் சில ஆண்டுகளுக்கு முன் அகலப் பாதையாக மாற்றப்பட்டது. விழுப்புரம் முதல் மயிலாடுதுறை வரை, 'மீட்டர் கேஜ்' ஆக இருந்ததால் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் ரயில் பயணம் செய்ய பெரும் சிரமத்திற்குள்ளாயினர். மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, விழுப்புரம் - மயிலாடுதுறை வரையிலான 122 கிலோ மீட்டர் தூர 'மீட்டர் கேஜ்' பாதையை அகல பாதையாக மாற்ற கடந்த 2006ம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதையொட்டி, அதே ஆண்டு டிசம்பர் மாதம் இப்பாதையில ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அகலப் பாதை பணியை கடந்த 2007ம் ஆண்டு ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்.வி.என்.எல்.,) நிறுவனம் 270 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் துவங்கியது. மூன்று பகுதியாக நடந்த இப்பணியில் 31 பெரிய பாலங்கள் உட்பட 380 பாலங்கள், ஆளில்லாத 48 கேட்கள், ஆட்கள் உள்ள 52 கேட்கள் அமைக்கப் பட்டுள்ளன. இப்பாதையில் ரயில் 2009 ஜூன் 30ம் தேதி இயக்கப்படும் என 2007 மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்போதைய ரயில்வே துறை இணை அமைச்சராக இருந்த வேலு தெரிவித்தார்.


கொள்ளிடம் பாலம் முடிக்க காலதாமதமானதால் அதே ஆண்டு டிசம்பரில் ஓடும் என்றனர். ஆனால், பயணிகள் ரயில் இயக்குவதில் தாமதம் நீடித்தது. தற்போது ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிக்கப் பட்டுவிட்டன. ரயில்வே நிலையங் களும் கம்ப்யூட்டர் மயமாக்கப் பட்டுள்ளன. சிக்னல், கிராசிங் பாயின்ட்கள் என நவீன தொழில்நுட் பத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, கோடை காலமாக இருப்பதால் பள்ளி விடுமுறையில் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர மத்திய அரசு பல பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வரிசையில் இன்று முதல் விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் இயங்கும் ரயிலும் இடம் பெறும்.


நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நிம்மதி: நான்கு ஆண்டுகளுக்கு பின், விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில் இயக்கப்படுவதால் வியாபாரிகள், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் நிம்மதியடைந்துள்ளனர். திருச்சி முதல் சென்னை வரை 336 கிலோ மீட்டர் தூர அகல ரயில் பாதை பணி கடந்த எட்டு ஆண் டிற்கு முன்பே 13 மாதங்களில் முடிக்கப்பட்டது. ஆனால், 122 கி.மீ., தூரமேயான விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதைக்கு நான்கு ஆண்டு காலம் ஆகிவிட்டது. அதுவும் ரயில்வே நிர்வாகம் இப்பாதையை சவாலாக எடுத்துக் கொண்டு முடித்து விட்டதாக மார்தட்டிக் கொள்கிறது.
தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களை இணைக்கும் பாதையான விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதையில் ரயில் நிறுத் தப்பட்டதால் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். அவர்கள் சென்னை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளுக்கு தொழில் ரீதியாக சென்று வருவதற்கும், பொருட்களை கொண்டுவர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அத்துடன் வயது முதிர்ந்தவர்கள் பஸ்களில் பயணம் செய்ய முடியாமல் தவித்தனர். சிதம்பரம், வேளாங் கண்ணி மற்றும் தென்மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்கள், முக்கிய இடங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக பாதித்தனர். முக்கியமாக அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவியர் படித்து வரும் நிலையில் அவர்கள் கல்லூரிக்கு வருவதற்கும், வீடு திரும்புவதற்கும் தவியாய்த் தவித்தனர். அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என பல தரப்பு மக்களும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு ரயில் வசதியின்றி தவித்துவந்த நிலையில், தற்போது ரயில் இயக்கப்படுவது அனைவரையும் நிம்மதியடைய செய்துள்ளது.
கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் கொண்டு வரும் மூலப்பொருட்கள் சென்னை துறைமுகத்தில் இறக்கி அங்கிருந்து சாலை மார்க்கத்தில் கொண்டு வரப்படுகிறது. இனி வரும் காலங்களில் சென்னையிலிருந்து ரயில் மூலம் எளிதாக கொண்டு வர முடியும். இதனால் நேர விரயத்தையும், கூடுதல் செலவையும் தவிர்க்க முடியும். அதே போன்று இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நேரடியாக முக்கிய துறைமுகங்களுக்கோ அல்லது நாட்டின் பிற பகுதிகளுக்கோ கொண்டு செல்லும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
கட்டணம் எவ்வளவு? விழுப்புரம் - மயிலாடுதுறை அகலப் பாதையில் இன்று காலை 6.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து ரயில் புறப்படுகிறது. விழுப்புரம் மூன்றாவது பிளாட்பாரத்திலிருந்து எட்டு கோச்சுகளுடன் பயணிகள் ரயில் இன்று காலை 6.10 மணிக்கு புறப்படுகிறது. ரயில்வே அதிகாரிகள் துவக்கி வைக்கின்றனர். பயணிகள் ரயில் நேற்று மாலை பையோ டீசல் இன்ஜினுடன் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. மயிலாடு துறையிலிருந்து இயக்க ஒரு டீசல் இன்ஜின் நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டது. விழுப்புரத்திலிருந்து காலை 6.10 மணிக்கு புறப்படும் ரயில் பண்ருட்டி, கடலூர், சிதம்பரம் வழியாக காலை 9.50க்கு மயிலாடுதுறை சென்றடையும். இதே போல் முன்னதாக மயிலாடுதுறையிலிருந்து அதிகாலை 5.30க்கு புறப்படும் ரயில் காலை 9.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். பின், விழுப்புரத்திலிருந்து மாலை 6.20க்கு புறப்படும் பயணிகள் ரயில் இரவு 10 மணிக்கு மயிலாடுதுறைக்கு சென்றடைகிறது. இதே போல், மயிலாடுதுறையிலிருந்து மாலை 6.10க்கு புறப்படும் ரயில் இரவு 10 மணிக்கு விழுப்புரம் வந்தடைகிறது.
விழுப்புரம்- மயிலாடுதுறைக்கு பழைய கட்டணமாக உள்ள 19 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 50 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட உள்ளது. பெரும்பாலான ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் உள்ளிட்டப் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளதால், குறைந்த வேகத்திலேயே பயணிகள் ரயில் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று இரவு வரை கட்டணம் குறித்த தகவல் வராததால் ரயில் டிக்கெட்டுகள், முன்பதிவு செய்யப்படவில்லை. இந்த பாதையில் ஓரிரு நாட்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்குவதற்கான ஏற்பாடுகளை ரயில்வே துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பயணிகள் ரயில் அவசரமாக இயக்கும் பின்னணி: சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி இன்றுடன் கெடு முடிவதால் விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. மயிலாடுதுறை பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், விழுப்புரம் - மயிலாடுதுறை பாதையில் உடனடியாக ரயில் இயக்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடாக மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த மார்ச் 5ம் தேதி டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் எலிப் தர்மராஜ், சசிதரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அதில், டில்லி ரயில்வே துறை செயலக அதிகாரி மற்றும் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆகியோர் நீதிபதிகள் முன் னிலையில் ஆஜராகி மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக சென்னைக்கு ரயிலை இயக்க முடியாது. அந்த பாதையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே, விரைவில் மயிலாடுதுறை- விழுப்புரம் வழியாக ரயில் இயக்கப்படும் என உறுதியளித்தனர்.
பின், வழக்கு மீண்டும் 19ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை நேரில் ஆஜராகி உறுதியான வாக்குமூலம் தெரிவிக்க வேண்டும் என, நீதிபதிகள் தெரிவித்தனர். 23ம் தேதி நடந்த விசாரணையில், நான்கு வாரத்திற்குள் விழுப்புரம் - மயிலாடுதுறை பாதையில் ரயில் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர். இதற்கிடையே அறிவித்த தேதிபடி ரயில் இயக்கவில்லையெனில், கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும் என, ரயில்வே அதிகாரிகளுக்கு வக்கீல் ராஜேந்திரன் பதிவு தபால் மற்றும் தந்தி மூலம் நோட்டீஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில், இன்றுடன்(ஏப்., 23ம் தேதி) ரயில்வே அதிகாரிகள் தெரிவித்த கெடு முடிவடைவதால், ரயில்வே நிர்வாகம் விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் பயணிகள் ரயிலை இயக்க ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வலியுறுத்திய 'தினமலர்': விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதை பணிகளை விரைவாக முடித்து, ரயில்களை இயக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக, 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து படங்களுடன் கட்டுரைகள், செய்திகளை வெளியிட்டது. பணியில் ஏற்படும் கால தாமதம், நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு கோடி மக்களின் பாதிப்புகளை 'தினமலர்' தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தது. 'தினமலர்' நாளிதழின் தொடர் முயற்சி காரணமாக விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் போக்குவரத்து இன்று சாத்தியமாகியுள்ளது.
நன்றி - தினமலர்

Thursday, April 15, 2010

சிறை சென்ற மாணவ வீரர்களுக்குப் பாராட்டு விழா - SFI மயிலாடுதுறை


ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்தும் அரசாணை எண்-170ஐ இரத்து செய்யக் கோரி நடத்தியப் போராட்டத்தில் சிறை சென்ற மாணவ வீரர்களுக்கு இந்திய மாணவர் சங்கம் சார்பில் பாராட்டு விழா 14.04.2010 ஆம் நாள் மயிலாடுதுறை ROA கட்டடத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு இந்திய மாணவர் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலர் சிங்காரவேலன் தலைமை தாங்கினார். இந்திய தொழிற்சங்க மையத்தின் நாகை மாவட்டச் செயலர் ஆர்.இராமானுசம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தஞ்சை மண்டலத் தலைவர், ஏவிசி கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன், இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டச் செயலர் மற்றும் அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்துகொண்டு சிறை சென்ற மாணவர்களுக்குப் பாராட்டும்முகத்தான் நினைவு பரிசுகளை இந்திய மாணவர் சங்கத்தின் அகிலஇந்திய துணைச் செயலர் தோழர் செல்வா, தமிழ்நாடு மாநிலச் செயலர் தோழர் கே.எஸ்.கனகராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியில் கிட்டப்பா மேல்நிலைப்பள்ளி இந்திய மாணவர் சங்கப்பொறுப்பாளர் நன்றி கூறினார். இந்த விழாவில் சிறை சென்றதற்ககாப் பரிசு பெற்ற அனைவரும் 18 வயதிற்கும் கீழானவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. படிப்போம் போராடுவோம் என்பதைத் தாண்டி சிறையும் செல்வோம் என்பது தமிழ்நாட்டு அரசியல் களத்தில் புத்தம்புதிய செய்தியாக அமைந்திருந்தது. வாழ்த்துவோம் மாணவர்களையும் இந்திய மாணவர் சங்கத்தையும்.
-தமிழ்த்திணைக்காக மயிலாடுதுறையிலிருந்து நெ.நிலவன்

மயிலாடுதுறை – விழுப்புரம் இடையே இரயில் இயக்கப்படவில்லை – மயிலாடுதுறை மக்கள் சோகம்



மயிலாடுதுறை சந்திப்பில் 15.04.2010 பகல் 12.00 மணியளவில் எடுக்கப்பெற்ற ஒளிப்படங்கள் – ஒளிப்படங்கள் – நெ.நிலவன்

மயிலாடுதுறை – விழுப்புரம் இடையே இரயில் இயக்கப்படவில்லை – மயிலாடுதுறை மக்கள் சோகம்

மயிலாடுதுறை – விழுப்புரம் இடையே இருந்து வந்த மீட்டர் கேஜ் இரயில்பாதையை அகல இரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 01.11.2006 முதல் தொடங்கியது. இதனால் மயிலாடுதுறை விழுப்புரம் இடையே இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் தெற்கு இரயில்வே சார்பில், மயிலாடுதுறை – விழுப்புரம் இடையே ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து காலையில் திருச்சியிலிருந்து சோழன் விரைவு வண்டியும் இரவில் காரைக்குடியிலிருந்து கம்பன் விரைவு வண்டியும் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாகச் சென்னைக்கு இரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு இரயில்வே அறிவித்தது. இந்த அறிவிப்புகளால் மயிலாடுதுறை மக்கள் பெரும் மகிழ்ச்சி கொண்டனர். கடந்த வாரத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஏப்ரல் 15 இரயில்கள் இயக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் இரயில்கள் இயக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் தள்ளிவைத்தது. ஆனால் நாள் குறித்து உறுதி எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தமிழ்த்திணையின் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் மற்றும் செய்தியாளர் மற்றும் ஒளிப்படப் பதிவாளர் நிலவன் ஆகியோர் இன்று (15.04.2010) காலை 11.30 மணியளவில் மயிலாடுதுறை சந்திப்பு சென்று நிலைய மேலாளர் திரு.கே.பி.பிரபாகரன் அவர்களைச் சந்தித்தோம். இரயில் நிலையத்தில் நடைபெறும் வேலைகளைப் ஒளிப்படங்கள் எடுத்துக்கொள்கிறோம். தங்களின் அனுமதி தேவை என்றோம். ஒளிப்படங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இரயில் எப்போது ஓடும்? ஏன் ஓடவில்லை என்று கேள்வி கேட்டால் நான் பதில் கூறமுடியாது. தெற்கு இரயில்வே பொதுமேலாளர்தான் பதில் செல்லவேண்டும் என்று கூறினார். இரயில் ஓடும் என்ற கனவுகளோடு காத்திருந்த மயிலாடுதுறை மக்கள் தற்போது தங்களின் கனவுகள் நிறைவேறவில்லையே என்ற மனக்குமுறலில் இருக்கிறார்கள் என்று மக்களின் மன உணர்வுகளைத் தெரிவித்து நிலைய மேலாளரிடமிருந்து விடைப் பெற்று ஒளிப்படங்களை எடுத்தோம். ஒளிப்படங்களை எடுத்து முடித்து வெளியே வந்தபோது, இரயில்வேயில் பயணச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் அலுவலர் அவர் எதிர்ப்பட்டார். அவர் இரயில்வேயின் முன்னணித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர். என்னிடம் நலம் விசாரித்துவிட்டு, சார் இந்த மயிலாடுதுறை – விழுப்புரம் இடையே சூலை மாதம் முதல்தான் இரயில்கள் ஓடும் என்று அதிர்ச்சியான தகவலை வெளியிட்டார். அதற்கிடையில் சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவு என்றார். ஒருவேளை மக்கள் தொலைக்காட்சியில், மயிலாடுதுறை தமிழர் உரிமை மீட்பு இயக்கத்தின் தலைவர் முரளி கூறியதுபோல் சென்னைக்குப் பேருந்துகளை இயக்கும் தனியார் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் இரயில்வேயின் உயர்அதிகாரிக்கு, அமைச்சர்களுக்கு இலஞ்சம் கொடுத்திருப்பார்களோ(?) என்ற மனஉளைச்சலோடு மயிலாடுதுறை சந்திப்பிலிருந்து விடைபெற்றோம்.

- தமிழ்த்திணைக்காக மயிலாடுதுறையிலிருந்து நெ.நிலவன்

Saturday, April 10, 2010

நேரலை

Watch live streaming video from tamilthinai at livestream.com

Friday, April 02, 2010

தமிழில்அறிவியல் - தொழில் நுட்ப இதழ்கள் - கருத்தரங்கம்




சூரியகதிர் இதழும் - தமிழ்த்திணை இணைய இதழும் இணைந்து நடத்தும்
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 3ஆம் கருத்தரங்கம் மற்றும்
தமிழ்த்திணை ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா

நாள் : சூன் திங்கள் 5 மற்றும் 6 ஆம் நாட்களில் (சனி, ஞாயிறு)
இடம் : பொன்கைலாஷ் விடுமுறை இல்ல விடுதி, ஏற்காடு - சேலம்


பேரன்புடையீர், வணக்கம்.
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 3ஆம் கருத்தரங்கம் தமிழில் அறிவியல் - தொழில்நுட்ப இதழ்கள் என்னும் பொருண்மையில் நடைபெறவுள்ளது. இந்தப் பொருண்மையில் கட்டுரை எழுத விரும்புவோர் கட்டுரையில் கணினியில் தட்டச்சு செய்து கட்டுரையை அச்சு வடிவத்திலும் குறுந்தகட்டிலும் (தட்டச்சு செய்யும் எழுத்துருவையையும்) அனுப்பி வைக்கவேண்டும்.
ஒருங்குறியீடு என்னும் Unicode இல் தட்டச்சு செய்வோர் கட்டுரைகளை tamilthinai@gmail.com
என்னும் மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி விடலாம்.
கருத்தரங்கில் கலந்துகொள்ள பேராளர் கட்டணம் ரூ.500/-ஐ ஆசிரியர், தமிழ்த்திணை, 43 - செண்பகம் தெரு, பெசண்ட் நகர், மயிலாடுதுறை - 609 001 என்ற முகவரிக்கு (M.O.) அனுப்பி வைக்கவேண்டும். அதில் பேராளரின் இல்ல முகவரி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். கட்டுரைகளை அனுப்பி வைக்கவேண்டிய கடைசி நாள் : 15.05.2010
கட்டுரைகளை உரிய நேரத்தில் அனுப்பி வைக்க இயலாத பேராளர்கள் பேராளர் தொகை அனுப்பி வைத்து தங்கள் வருகையை உறுதி செய்துகொண்டு, கட்டுரையை நேரடியாகவும் கருத்தரங்கில் அளிக்கலாம். கட்டுரை ஏ4 அளவில் 5 பக்கங்களுக்குள் அமைத்திருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ஆசிரியர், தமிழ்த்திணையைத் தொடர்பு கொள்ளலாம் - அலைபேசி எண் - 9443214142

Thursday, March 18, 2010

கவிஞர்கள் சங்கம விழா - அழைப்பு

உ.வே.சா. தமிழாய்வு மன்றம்
ஆக்கூர் முக்கூட்டு - 609 301.
தரங்கம்பாடி வட்டம்,நாகை மாவட்டம்
தமிழ்நாடு.

எட்டாம் ஆண்டு நிறைவு விழா - கவிஞர்கள் சங்கம அழைப்பிதழ்

தமிழ் மொழிக்குச் சிறந்த நற்சேவையைச் செய்துவரும் உ.வே.சா.தமிழாய்வு மன்றம் எட்டாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கவிஞர்களை ஒன்றிணைக்கும் விதமாக, கவிதைத் தொகுப்பு வெளியிட உள்ளது. இத் தொகுப்பிற்காகக் கவிஞர்களிடமிருந்து கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.
தற்கால இலக்கியம் - கவிதை என்ற தலைப்பில் நூற்தொகுப்புகள் வெளியிடப்பட உள்ளன. இத்தொகுப்பில் தமிழ் மக்களின் வாழ்வியலை உங்களின் கவிதையில் பதிவு செய்யுங்கள். உங்களின் மொழி அமைப்பே தற்காலத் தமிழின் கட்டமைப்பு. கூட்டு முயற்சியின் பதிவே தமிழ்ச் செம்மொழி என்ற அடையாளம்.

விதிமுறைகள்

கவிதைகள் மட்டுமே வரவேற்கப்படுகின்றன
யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
எழுதப்படும் கவிதை தனி மனிதரைப் பற்றியும் சாதி,மதங்களைப் பற்றியும் அமையக்கூடாது. தேசியத்திற்கு எதிராக எழுதக்கூடாது.
தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள் மட்டுமே நூற்தொகுப்பாக ISBN எண்ணுடன் வெளியிடப்படும்.
மரபுக்கவிதை, புதுக்கவிதை, கைக்கூ கவிதை என்ற வரையறை இல்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
பதிவுக் கட்டணம் இல்லை.
கவிஞர்கள் கவிதையுடன் தங்களது தன் விபரக்குறிப்பைப் புகைப்படத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
கவிதைகள் மேலே கண்ட முகவரிக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் - 15.04.2010.

Tuesday, March 16, 2010

ஒருமைவகைப் பல்கலைக்கழகம் - எதிர்ப்பு உண்ணாவிரதம் - நகர்வு ஒளிப்படங்கள்

ஒருமைவகைப் பல்கலைக்கழகம் - எதிர்ப்பு உண்ணாவிரதம் - மயிலாடுதுறை



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாகை மாவட்ட மாணவரணிச் செயலர் திரு.நற்குணன் அவர்கள் உண்ணாவிரத பந்தலுக்கு வந்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் பெ.ஜெயகாந்தி அவர்களுக்குச் சால்வை அணிவித்துப் போராட்டம் வெற்றியடை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். சுமார் 30 நிமிடங்கள் உண்ணாவிரத நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டார். திரு.நற்குணன் அவர்களுடன் நாகை மாவட்டப் பொறுப்பாளர்கள், மயிலாடுதுறை நகர,ஒன்றியப் பொறுப்பாளர்களும் வருகை தந்திருந்தனர்.



ஒருமைவகைப் பல்கலைக்கழகங்களை எதிர்த்து கல்லூரி ஆசிரியர்,அலுவலர், மாணவர் சங்கங்கள் சார்பில் மயிலாடுதுறையில் 16.03.2010 உண்ணாவிரதம் நடைபெற்றது

அரசுக் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளைத் தமிழக அரசு ஒருமைவகைப் பல்கலைக்கழகமாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. அந்த முடிவினைக் கைவிடவும், அதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவைக் கலைக்கவும் வலியுறுத்தி ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 16.03.2010 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, AUT மாநிலத் தலைவர் முனைவர் பெ.ஜெயகாந்தி அவர்கள் தலைமையிலும், தமிழ்நாடு நிதிஉதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கப் பொறுப்பாளர் (ஏவிசி கல்லூரி) இரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலையிலும் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி, ஞானம்பிகை அரசு பெண்கள் கல்லூரி, தருமபுரம் ஆதினக் கலைக்கல்லூரி, பொறையாறு டிபிஎம்எல் கல்லூரி, பூம்புகார் கல்லூரிகளிலிருந்து சுமார் 200 பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். மாணவர் சங்கங்களின் சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்தி, இந்திய தொழிற்சங்க மைய நாகை மாவட்டச் செயலர் ஆர்.இராமானுசம், சிபிஎம் ஒன்றியச்செயலர் திரு.டி.கணேசன், மயிலாடுதுறை அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் திரு.இராயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் திரு.ஸ்டாலின், இந்திய மாணவர் சங்க நாகை மாவட்டச் செயலர் திரு.சிங்கரவேலு, இந்திய மாணவர் பெருமன்றம் சார்ந்த திரு.அருள்ராஜன், இந்தியப் பெருமன்ற நாகை மாவட்டச் செயலர் திரு.சுரேஷ் ஆகியோர் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தஞ்சை மண்டலத் தலைவர் முனைவர் தி.நெடுஞ்செழியன் மற்றும் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் மண்டல இணைச் செயலர் முனைவர் திலகவதி ஆகியோர் கவனித்துக் கொண்டனர்.



-மயிலாடுதுறையிலிருந்து தமிழ்த்திணைக்காக நிலவன்(சிறப்பு செய்தியாளர்)

Monday, March 15, 2010

மாணவர் சாரங்கபாணி நினைவுநாள்

மாணவர் சாரங்கபாணி நினைவுநாள் - 15.03.2010



சிறப்புரை : எழுத்தாளர்,கவிஞர் சூரியதீபன்

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தாய்மொழிக் காக்க தன்னுயிரை தீயினுக்குக் கொடுத்து இந்தி ஆதிக்கத்தைத் தடுத்தான் என்பது மொழிப் போராட்ட வரலாறு. இதேநாளில் 1965இல் ஈகியாய் தமிழர்தம் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மாணவமணி சாரங்கபாணியின் நினைவுநாள் சிறப்புக் கூட்டம் மயிலாடுதுறை வருவாய் அலுவலர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திரு.நாக.இரகுபதி தலைமை தாங்கினார். இந்த விழாவில் ஏவிசிக் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் த.செயராமன், தமிழறிஞர் முனைவர் கி.செம்பியன், மயிலாடுதுறை முத்தமிழ்மன்றத் தலைவர் சிவ.கோபாலகிருட்டினன்,தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் பேராசிரியர் இரா.முரளிதரன் ஆகியோர் உரையாற்றினார்கள். மொழிப் போராட்டக் களவீரர், எழுத்தாளர்,கவிஞர் சூரியதீபன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவிற்கு ஏவிசி கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சு.தமிழ்வேலு வரவேற்புரையாற்றினார். தமிழ்ச் சான்றோர் ந.கலியபெருமாள் நன்றி கூறினார். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் திரண்டுவந்து விழாவைச் சிறப்பித்தார்கள். தமிழ்த்திணையின் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் தமிழ்த்திணைக்காக ஒளிப்படங்களை எடுத்தார்.
- தமிழ்த்திணைக்காக மயிலாடுதுறையிலிருந்து நிலவன்(சிறப்புச் செய்தியாளர்)

தமிழுக்கா உயிர் நீத்த ஈகி மாணவர் சாரங்கபாணி நினைவுநாள் ௧௫.0௩.௧0, மயிலாடுதுறை

Sunday, March 07, 2010

உலக மகளிர் தினம் - ஜனநாய மாதர் சங்கம் - உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு - மயிலாடுதுறை 07.03.10

ஜனநாயக மாதர் சங்கப் பொதுச்செயலர் உ.வாசுகி சிறப்புரை- மயிலாடுதுறை (07.03.2010)




ஜனநாயக மாதர் சங்கப் பொதுச்செயலர் உ.வாசுகி சிறப்புரை

மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 07.03.2010 ஞாயிறு மாலை 5.00 மணியளவில் ஜனநாயக மாதர் மற்றும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் உலக மகளிர் தினம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு ஜி.கலைச்செல்வி தலைமை தாங்கினார். பி.புவனேஸ்வரி மற்றும் எல்.பி.வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்.தேன்மொழி வரவேற்புரை ஆற்றினார். திருமதி ஆர்.பத்மாசினி நன்றியுரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் உ.வாசுகி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் உரையின் சில பகுதிகள் :
உலகப் பெண்கள் தினம் என்பது போராடிப் பெற்றதாகும். 8 மணி நேரம் வேலை, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணிநேரம் உறக்கம் என்ற அடிப்படையில் மே தினத்தைப் பெற்றோம். அதுபோலவே பெண்களின் உரிமைக்காகவும் நாம் போராடி உரிமைகளைப் பெற்ற நாள்தான் மார்ச் 8. நம் பணிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இதில் யாரும் சலிப்படைய வேண்டிய தேவையில்லை. நாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்போம். நம் கோரிக்கைகள் இன்று அல்ல, நாளை அல்ல, நாளை மறுநாள் என்று என்றாவது ஒருநாள் நிறைவேற்றப்படும். அந்த நம்பிக்கைகளோடு தொடர்ந்து நாம் போராடிக் கொண்டிருப்போம்.
இன்றைக்கு எல்லா நிலைகளிலும் போராடி வாழ்ந்து வரும் பெண்களுக்குப் பிரச்சனைகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாட்டில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அதனை நிறைவேற்றுவதற்குப் போராட்டங்களைத் திட்டமிட்டிருக்கிறோம்.
1.விழுப்புரத்தில் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவியை ஒரு இளைஞர் காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். இதனை அந்தப் பெண் தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். பெற்றோர் அந்த இளைஞரின் பெற்றோரிடம் முறையிட, அந்த இளைஞர் பின்னால் சுற்றுவதை நிறுத்தி இருக்கிறார். ஒரு வாரம் கழித்து அந்த இளைஞர் அந்தப் பெண்ணை வழிமறித்து தன்னைக் காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்த, அந்தப் பெண்ணின் குடும்பத்தார் அதே ஊரில் வேறு தெருவிற்கு மாறிவிட்டார்கள். இந்நிலையில் தன்னை ஏற்க மறுத்த அந்தப் பெண்ணை பழிவாங்கும் நோக்கத்துடன், அம்மா, அப்பாவுடன் வீட்டிற்குள் இருந்த அந்த பெண்ணின் மீது திராவகம் என்னும் ஆசிட்டை வீசி இருக்கிறான். அந்தப் பெண்ணின் குடும்பம் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 4 மாதங்கள் உள்நோயாளியாக இருந்து மனஉளைச்சலோடு சிகிச்சை பெற்றுவந்தனர். தற்போது அந்த பெண் எம்.ஏ.,எம்.பில். முடித்திருக்கிறார். அந்த இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை. அந்தப் பெண் பெங்களூரு மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது, என் முகத்தை நான் கண்ணாடியில் பார்ப்பது இல்லை. எனக்குத் துன்பம் செய்தவன் சிறையில் இருக்கிறான். ஆனால் படித்து முடித்துள்ள எனக்கு என் முகத்தால் வேலை கிடைக்கவில்லை என்றாள். இதுபோன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சிகிச்சைக்கான உதவிகளையும் அவர்களின் மறுவாழ்வுக்காக அரசு வேலைவாய்ப்புகளை தர தனியாக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றார்.
2. உயர்சாதி பெண்கள் தாழ்த்தப்பட்டசாதி ஆண்களைத் திருமணம் செய்துகொண்டால் உயர்சாதி சமூகத்தவர் அவர்களைக் கொன்றுவிட சமூக ஆணை பிறப்பிக்கின்றார்கள். மகாராஷ்டத்தில் இப்படி ஒரு பெண் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். அவளின் அண்ணன் இந்தப் பெண்ணின் மாமனார், மாமியார், கணவர் மற்றும் அவர் நண்பர் என 4 பேரை கொலை செய்துவிடுகிறார். 8 மாத கர்ப்பிணியான அந்தப் பெண் சோதனைக்காக மருத்துவமனை சென்ற நேரத்தில் இந்த கொலைகள் நடந்து முடிகின்றன. உயர்சாதி பெண்ணின் அண்ணனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் அந்த தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்படுகிறது. உயர்சாதி இளைஞர் அவமானம் தாங்கமுடியாமல் செய்த இந்த குற்றம் திட்டமிட்டு செய்யப்பட்டது அல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அந்த பெண் இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை. 8மாத கர்ப்பிணியாக இருந்த நான் கொலை செய்யப்படவில்லை. அப்பாவின் முகத்தைப் பார்க்காத என் குழந்தைக்கு இப்போது 3 வயது. நான் இதுவரை கொலை செய்யப்படவில்லை. உயர்சாதி இளைஞனின் உணர்வுகளை மதித்த உச்ச நீதிமன்றம், தாழ்த்தப்பட்ட சாதியில் மணம் முடித்துக் கொண்ட என் மன உணர்வுகளை மதிக்கவில்லை என்றாள். இதுபோன்ற சமூகங்கள் நடத்தும் கொலைகளைத் தடுக்க புதிய சட்டங்கள் இயற்றவேண்டும் என்றார்.
3. பெண்களைக் காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு, ஆண்கள் கைவிடும் போக்கும் இப்போது அளவுக்கு அதிகமாகி வருகின்றது. இதற்கு காரணம், இதுபோன்ற தவறுகளுக்கு ஆண்கள் நீதிமன்றத்தால் 6 மாதம் சிறை 600 ரூபாய் அபராதம் என்ற நிலை உள்ளது. இதனால் ஆண்களிடம் பெண்களை ஏமாற்றும் போக்கு அதிகமாகி வருகிறது. இதனைத் தடுக்க சிறைத் தண்டனையை அதிகமாக்கவும், அபராதத் தொகையை அதிகமாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
மேலும், அதிகரித்து வரும் விலைவாசி, பெட்ரேல் டீசல் விலை உயர்வு, மரபணு நீக்கம் செய்யப்பட்ட கத்தரிக்காய், பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு போன்ற பல்வேறு சமூக பிரச்சனைச் சுட்டிக் காட்டி சிறப்புரையாற்றினார்.

AUT - தலைமைப் பண்பு பயிற்சி முகாம் - சேலம் - ஏற்காடு - அழகிய காட்சிகள்

அய்யனார் கோவில் - மயிலாடுதுறை

ஈழத்தமிழர் ஆதரவு ஊர்வலம் - மயிலாடுதறை

லோகம்பாள் (அம்மா) நினைவு நாள் - கீழக்கல்கண்டார் கோட்டை (31.05.2009)

AVCC - AUT முனைவர் தி.நெடுஞ்செழியன் பணியிடை நீக்கம் உண்ணாவிரதம் 1

AVCC - AUT முனைவர் தி.நெடுஞ்செழியன் பணியிடை நீக்கம் உண்ணாவிரதம் 2

AVCC -AUT முனைவர் தி.நெடுஞ்செழியன் பணியிடை நீக்கம் உண்ணாவிரதம் 3

மயிலாடுதுறை JAC முனைவர் தி.நெடுஞ்செழியன் பணியிடை நீக்கம் ஆர்ப்பாட்டம்