Tuesday, July 05, 2011

மயிலாடுதுறையில் வள்ளுவர் கோட்டம் - 03.07.2011- திறப்பு


தமிழறிஞர் ச.தண்டபாணிதேசிகர் பெயரன் பொறியாளர் நா.இமயவரம்பன் அவர்கள் மயிலாடுதுறை விசித்திராயர் வீதியில் வள்ளுவர் கோட்டம் அமைத்துள்ளார். தன் இல்லத்தின் முகப்பில் திருவள்ளுவர் சிலையையும் அமைத்துள்ளார். இதன் திறப்பு விழா 03.07.2011 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.
இந்த விழாவிற்குச் செந்தமிழ் அருவி முனைவர் கி.செம்பியன் தலைமை தாங்கினார். நல்லாசிரியர் கோ.நீலகண்டன் அவர்கள் வள்ளுவர் கோட்டத்தைத் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஏவிசி கல்லூரி முன்னை முதல்வர் முனைவர் மு.வரதராசன், புலவர் சி.பன்னீர்செல்வம் டி.எஸ்.தியாகராஜன், இரா.செல்வநாயகம் போன்ற ஆன்றோர்கள், சான்றோர்கள், தமிழறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் கோவை அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழக இசைத் துறைப் பேராசிரியர் குடியரசு தலைவரிடம் செம்மொழி விருது பெற்ற முனைவர் இரா.கலைவாணி அவர்கள் அன்புடமை, விருந்தோம்பல் அதிகாரத்தை இசைக் கூட்டி பாடினார். முனைவர் கோ.இரவிசெல்வம் நன்றி கூறினார். இவ்விழாவில் தமிழ்த்திணை ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

1 comment:

கைவினைப்பொருள்கள் said...

ஃபிரான்சிஸ் ஆலுக்காஸ் ஜுவலரியின் விளம்பரத்தின் தவறினை சுட்டிக்காட்டிய தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
முனைவர் கா.ஆ.செல்வராசு, தஞ்சை